உயர்தர பூகம்ப சோதனை மற்றும் ஆராய்ச்சிக்கூடம்

எம்மைப் பற்றி

அ. தொ. ஆ. பே.-கட்டமைப்புப் பொறியியல் ஆராய்ச்சி நடுவத்தின் (அ. தொ. ஆ. பே. - க. பொ. ஆ. ந.) உயர்தர பூகம்ப சோதனை மற்றும் ஆராய்ச்சிக்கூடத்திற்கு வருக! இந்த தேசிய ஆய்வுக்கூடமானது, அ.தொ.ஆ.பே.-க.பொ.ஆ.ந. வின் 43வது நிறுவன நாளான 10 ஜுன் 2007 அன்று தொடங்கப்பட்டது. அனைத்து முக்கிய பூகம்ப சோதனை வழிமுறைகளையும் ஒருங்கிணைத்தமைத்த நோக்கத்திற்கு கட்டப்பட்ட, இற்றை-நிலை-நுட்ப ஆய்வுக்கூடமானது, பூகம்பப் பொறியியலில் இக்கட்டான சிக்கல்களுக்கு தீர்வுகாணும் விதமான அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. பூகம்பம் போன்ற இயக்கவியல் இடர்களுக்குள்ளாகும் பொதுக்கட்டமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் ஏற்புடைமையை அதிகரிப்பதற்கான புத்தாக்க உத்திகளை உருவாக்க பல்புலஒருங்கமைவு அறிவு மற்றும் சிறப்பறிவுத்திறமையை உருவாக்க முனைந்திருக்கிறது. எமது ஆராய்ச்சிகள், கட்டமைப்பு இயக்கவியல், பொதுக் கட்டமைப்புகளின் பூகம்ப-செயற்பாடு மதிப்பிடல், பூகம்பசார் மறிவினை கட்டுப்பாட்டால் பூகம்பத்தை எதிர்கொள்கிற வடிவாக்க உத்திகளை உருவாக்குதல் மற்றும் கட்டமைப்புகளின் அதிர்வு கணிப்பிடல் ஆகிய புலங்களில் ஒருமுகப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்கூடமானது, இந்தியாவில் பூகம்பப் பொறியியல் மற்றும் அதிர்வு-இயக்கவியலுக்கான குவியமாக விளங்க தொடர்ந்து முனைகிறது.

Advanced Seismic Testing & Research Laboratory ( ASTaR )

Head, Advanced Seismic Testing and Research Laboratory

முனைவர் காமாட்சி ப

முனைவர் காமாட்சி ப

மூத்த முதன்மை விஞ்ஞானி

  • Tel: 22549216
  • Email: kamat(at)serc(dot)res(dot)in